கேரளா: 5 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் அணி-3 இடதுசாரி கூட்டணி-2


கேரளா: 5 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் அணி-3 இடதுசாரி கூட்டணி-2
x

கேரளாவில் 5 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் காங்கிரஸ் அணிக்கு 3 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபையில் 5 இடங் களுக்கு 21-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் 2 தொகுதிகளை ஆளும் இடதுசாரி கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ்) 3 இடங்களில் வென்றுள்ளது.

ஆரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷானிமோல் உஷ்மான் வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மனுபுலிக்காலை 2,079 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

வட்டியூர்காவு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிரசாந்த் வென்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரை 14 ஆயிரத்து 465 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கோனி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஜேனீஷ் குமார் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மோகன்ராஜை 9,953 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினோத் வென்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த இடதுசாரி கூட்டணியின் சுயேச்சை வேட்பாளர் மனுராயை 3,750 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்தார்.

மஞ்சேஸ்வரம் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ்) கூட்டணி முஸ்லீம் லீக் வேட்பாளர் கம்ருதீன் வெற்றி பெற்றார். தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் ரவிஷா தந்திரி குந்தரை 7,923 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


Next Story