அரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும்: அமித்ஷா


அரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும்: அமித்ஷா
x
தினத்தந்தி 25 Oct 2019 2:45 AM GMT (Updated: 25 Oct 2019 2:45 AM GMT)

அரியானாவில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று அக்கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வந்த அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

அரியானா மாநிலத்தில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் உள்ள 90 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் பாரதீய ஜனதா கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் வர முடிந்தது. தனிப்பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. 

இந்த நிலையில், அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ அரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் மக்கள் நலனுக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டார். பாஜகவை அதிக இடங்களில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ளதால், நாங்களே (பாஜக) ஆட்சி அமைக்க உரிமை கோருவோம் என்பதை அமித்ஷா தெளிவு படுத்தியுள்ளார். 


Next Story