விழிப்புணர்வு பிரசாரத்திற்காக 10 கிலோ மீட்டர் ஜாகிங் சென்ற முதலமைச்சர்


விழிப்புணர்வு பிரசாரத்திற்காக 10 கிலோ மீட்டர் ஜாகிங் சென்ற முதலமைச்சர்
x
தினத்தந்தி 25 Oct 2019 11:35 AM GMT (Updated: 25 Oct 2019 11:35 AM GMT)

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுமார் 10 கிலோ மீட்டர் ஜாகிங் சென்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொல்கத்தா,

64 வயதாகும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வீட்டில் டிரெட்மில்லில் தினமும் நடைபயிற்சி செய்து வருகிறார். 

சர்வதேச பருவநிலை மாறுபாடு விழிப்புணர்வு தினமான நேற்று, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் ஜாகிங் சென்றார். 

டார்ஜீலிங்கில் உள்ள மலையடிவார பகுதியான குர்சியானிலிருந்து மகாநதி வரை ஜாகிங் சென்ற அவர், வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதே வழியில் மீண்டும் திரும்பினார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த மம்தா பானர்ஜி,

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக ஜாகிங் செய்த முதலமைச்சர் தனது வீடியோவில், ‘ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நல்ல ஆரோக்கியமே முக்கியம். காலை உணவு போன்ற ஒரு நல்ல பழக்கம்' என கூறினார்

Next Story