தேசிய செய்திகள்

விமானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட விமானி, பணிப்பெண் பணிநீக்கம் + "||" + The pilot of the plane behaved indecently, maid dismissal

விமானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட விமானி, பணிப்பெண் பணிநீக்கம்

விமானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட விமானி, பணிப்பெண் பணிநீக்கம்
விமானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட விமானி, பணிப்பெண் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,

டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் கடந்த மாதம் சென்றது. அப்போது சீருடையில் இருந்த விமான பணிப்பெண், விமானத்தில் ஒருவருடன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

விமானம் புறப்பட்டவுடன் இருவரும் அருகருகே அமர்ந்து அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர். இதனால் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் சிலர் அந்த விமான நிறுவனத்தில் புகார் அளித்தனர்.


இது தொடர்பாக விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தியது. விசாரணையில் பணிப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்தது மாற்று விமானி என்பதும், அவர் அப்போது பணியில் இல்லை என்பதும் தெரியவந்தது. இருவரும் பயணிகள் மத்தியில் அநாகரிகமாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் மின் கம்பியில் தொங்கிய விமானம்; விமானி உயிர் தப்பிய அதிசயம்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் சாகோபே நகரில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. தாமஸ் கோஸ்கோவிச் (வயது 65) என்ற முதியவர் விமானத்தை ஓட்டினார். விமானத்தில் அவர் மட்டுமே இருந்தார்.
2. விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு
விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
3. அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலி
அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
4. விமானத்தில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தம் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
காஷ்மீரில் நிலைமையை நேரில் பார்வையிடவும், மக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி தலைமையில் விமானத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
5. நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது தெரியவந்ததையடுத்து விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.