தேசிய செய்திகள்

ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம் + "||" + Why did Rahul Gandhi go abroad? - Congressional interpretation

ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்

ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்
ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன் என காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்வுகளில் எதிலும் பங்கேற்கவில்லை. அவர் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ராகுல் காந்தி எதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார்? என கேட்கப்பட்டது.


அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக கடந்த காலங்களில் அடிக்கடி வெளிநாடு சென்று வந்திருக்கிறார். தற்போதும் அதுபோன்ற ஒரு பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்’ என்று கூறினார்.

ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கலாம் எனவும், அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. சிவசேனா, என்சிபி, காங். தீவிர ஆலோசனை : குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இறுதி வடிவம் பெற்றதாக தகவல்
மராட்டியத்தில் ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
2. தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக கூடாது; ஆதரவு வழங்க காங்கிரஸ் நிபந்தனை
மராட்டியத்தில் அரசு அமைக்க தனது ஆதரவை வழங்குவதற்கு மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது.
3. மராட்டியத்தில் ஆட்சி அமைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் - மாநில தலைவர்கள் எச்சரிக்கை
மராட்டியத்தில் ஆட்சி அமைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் என முக்கிய தலைவர்கள் சோனியா காந்தியிடம் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
4. சிவசேனாவுக்கு ஆதரவு கடிதம் கொடுக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்? - பரபரப்பு தகவல்கள்
சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுப்பதில் இருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்
மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தேசியவாத காங்கிரசில் சேருங்கள். காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி பிரீத்தி சர்மா மேனன் கூறி உள்ளார்.