கொல்கத்தாவில் நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சி ‘விக்யான் சமாகம்’


கொல்கத்தாவில் நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சி ‘விக்யான் சமாகம்’
x
தினத்தந்தி 31 Oct 2019 12:29 PM GMT (Updated: 31 Oct 2019 12:29 PM GMT)

சர்வதேச அறிவியல் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பைக் காட்டும் விதமாக மாபெரும் அறிவியல் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

கொல்கத்தா,

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), அணுசக்தித் துறை (DAE) மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை (NCSM) ஆகியவற்றின் மூலம் ‘விக்யான் சமாகம்’ என்னும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. 

இந்தியா பங்கெடுத்துள்ள சர்வதேச அறிவியல் ஆரய்ச்சி திட்டங்களான பெரிய ஹாட்ரான் மோதுவி (LHC), இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO), சர்வதேச வெப்ப அணு பரிசோதனை உலை (ITER) மற்றும் பல திட்டங்கள் குறித்தும் இந்த கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்படும்.

இதற்கு முன் கடந்த மே 8 முதல் ஜூலை 7 வரை மும்பையிலும், ஜூலை 29 முதல் செப்டம்பர் 28 வரை பெங்களூருவிலும் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியானது அடுத்ததாக கொல்கத்தாவில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை நடைபெற உள்ளது. இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்க உள்ளார்.

மும்பையிலும், பெங்களூருவிலும் இதுவரை 1.3 லட்சம் பேர் இந்த கண்காட்சியை பார்வையிட்டதாகவும் கொல்கத்தாவில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கொல்கத்தா அறிவியல் மையத்தின் இயக்குனர் சுபப்ரதா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Next Story