நாட்டிலேயே குடவா சமூகத்திற்கு ஆயுதங்களுக்கான உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு


நாட்டிலேயே குடவா சமூகத்திற்கு ஆயுதங்களுக்கான உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு
x
தினத்தந்தி 31 Oct 2019 1:55 PM GMT (Updated: 31 Oct 2019 1:55 PM GMT)

நாட்டிலேயே ஆயுதங்கள் வைத்திருக்க உரிமம் பெறுவதில் இருந்து குடவா சமூகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளித்து உள்ளது.

மடிகேரி,

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் குடவா சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த சமூக மரபின்படி ஒருவரின் வீடானது மற்றொருவரின் வீட்டில் இருந்து வெகுதொலைவில் அமைந்து உள்ளது.

இவர்கள் வீட்டில் குழந்தைகள் பிறக்கும்பொழுது, வானை நோக்கி துப்பாக்கியால் ஒரு முறை சுடுவது வழக்கம்.  இதேபோன்று குடும்பத்தில் யாரேனும் இறந்து விட்டால் 2 முறை சுடுவது வழக்கம் என குடவா சமூக உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆயுத சட்ட விதிகளின்படி, அவர்களுக்கு ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமம் பெறுவதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்து உள்ளது.  இந்த விலக்கானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த சமூகத்தினர் கொண்டாட கூடிய காலிபோத் என்ற திருவிழாவின்பொழுது ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.  இதனை அடுத்து அவர்களின் கலாசார மற்றும் மத உணர்வுகளை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அவர்கள் கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்கள் மற்றும் இரட்டை குழல் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருக்க உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story