ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே வானொலி நிலையங்கள் பெயர் மாற்றம்


ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே வானொலி நிலையங்கள் பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 31 Oct 2019 2:47 PM GMT (Updated: 31 Oct 2019 2:47 PM GMT)

காஷ்மீர் மாநிலம் இன்று முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்ததையடுத்து அங்குள்ள வானொலி நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. 

இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களாக இன்று பதவியேற்றனர்.

இதனை தொடர்ந்து ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே  ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே ‘ஆல் இந்தியா ரேடியோ-ஜம்மு’, ‘ஆல் இந்தியா ரேடியோ- ஸ்ரீநகர்’ மற்றும் ‘ஆல் இந்தியா ரேடியோ- லே’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story