தேசிய செய்திகள்

வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு ; காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Modi govt caught snooping: Congress corners govt as WhatsApp spygate row explodes

வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு ; காங்கிரஸ் குற்றச்சாட்டு

வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு ; காங்கிரஸ் குற்றச்சாட்டு
வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,

பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் நேற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. உலகம் முழுவதும் பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறியது.

ஆனால், இந்தியாவில் எத்தனை பேர் உளவு பார்க்கப்பட்டனர் என்ற விவரத்தை ‘வாட்ஸ்-அப்’ தெரிவிக்கவில்லை. யாருடைய உத்தரவின்பேரில், உலகம் முழுவதும் உளவு பார்க்கப்பட்டது என்ற விவரத்தையும் கூறவில்லை. பயனாளர்களின் அடிப்படை அந்தரங்க உரிமைகளை பாதுகாக்க ‘வாட்ஸ்-அப்’ உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் வில் கேத்கார்ட் தெரிவித்துள்ளார். உளவு விவகாரத்தை விசாரிக்க ‘வாட்ஸ்- அப்’புக்கு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள சிட்டிசன் ஆய்வுக்கூடம் உதவி செய்துள்ளது.

இந்நிலையில், உளவு மென்பொருளை உருவாக்கியதாக கூறப்படும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதற்கிடையே, இந்த உளவு விவகாரம், இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே,  செல்போன் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருவதாகவும் சுர்ஜேவாலா தெரிவித்தார். தனி நபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில் அதை மீறும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் மத்திய அரசை விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
2. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
3. காஷ்மீரில் இணைய தள முடக்கம் ஏன்? மத்திய அரசு விளக்கம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
4. பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை பயன்படுத்த தவறிய மாநிலங்கள்
பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை பயன்படுத்த மாநிலங்கள் தவறிவிட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு
ரூ. 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று பாஜக தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.