மராட்டிய காங்.தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை


மராட்டிய காங்.தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 1 Nov 2019 4:22 AM GMT (Updated: 2019-11-01T09:52:38+05:30)

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், சோனியா காந்தியை மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளனர்.

புதுடெல்லி,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாரதீயஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. இரு கட்சிகளுக்கும் சேர்த்து மெஜாரிட்டி கிடைத்தபோதும் சிவசேனா முதல்-மந்திரி பதவியிலும், ஆட்சி அதிகாரத்திலும் சமபங்கு கேட்பதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

மராட்டிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில்,  இன்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். மராட்டியத்தில் பாஜக- சிவசேனா கூட்டணியில் கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் சூழலில், தேசிய வாத காங்கிரஸ் - காங்கிரஸ்  கூட்டணி அமைத்து  ஆட்சி அமைப்பது  குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story