டெல்லியில் மாசுபாட்டிற்கு அண்டை மாநிலங்களே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


டெல்லியில் மாசுபாட்டிற்கு அண்டை மாநிலங்களே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Nov 2019 8:04 AM GMT (Updated: 1 Nov 2019 8:04 AM GMT)

டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டிற்கு அண்டை மாநிலங்களே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

உலக அளவில் காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது.  கடந்த 27-ம் தேதி தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஏராளமானோர் மூச்சு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தே காணப்படுகிறது.  

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

அரியானா மற்றும் பஞ்சாப் அரசுகள், தங்கள் மாநில விவசாயிகளை வேளாண் குப்பைகளை எரிக்கும்படி வற்புறுத்துவதால் டெல்லி காற்று மாசுபாட்டின் மையமாக மாறி உள்ளது.

இத்தகைய நச்சு கலந்து வாயுக்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது அவசியம். இதனால் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 50 லட்சம் முக கவசங்கள் வழங்கும் பணியை துவக்கி உள்ளோம். டெல்லி மக்கள் அனைவரும் இத்தகைய முக கவசங்களை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். 

அத்துடன், விவசாயிகள் குப்பைகளை எரிப்பதை தடுக்கும்படி பஞ்சாப் மற்றும் அரியானா  முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதும்படி பள்ளி குழந்தைகளையும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். 

பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகளை எதிர்த்து டெல்லியில் உள்ள பஞ்சாப் மற்றும் அரியானா பவன் முன்பு கெஜ்ரிவால் நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story