தேசிய செய்திகள்

போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது + "||" + Fined for traffic violation Man arrested for burning motorcycle

போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது

போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது
போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

டெல்லியின் சகேத் பகுதியில் உள்ள சந்தையில், தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை போலீசார் எடுத்து சென்றனர். அவற்றை மற்றொரு பகுதியில் நிறுத்தி வைத்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அதில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான முகேஷ் என்பவர் அங்கு வந்தார். மதுபோதையில் இருந்த அவரிடம், தடை செய்யப்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதற்காக ரூ.500 அபராதம் விதித்து அதற்கான ரசீதை போலீசார் கொடுத்தனர். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த முகேஷ், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த முகேஷ், தனது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார். இதில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார், முகேசை பிடித்து உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் முகேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து விதிமீறல்களுக்காக ‘ஆன்லைன்’ மூலம் நீதிமன்றங்களில் அபராதம் செலுத்தும் வசதி - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இன்று தொடங்கி வைக்கிறார்
போக்குவரத்து விதிமீறல்களுக்காக சென்னையில் ‘ஆன்லைன்’ மூலம் நீதிமன்றங்களில் அபராதம் செலுத்தும் வசதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இன்று தொடங்கிவைக்கிறார்.