6 பேர் கொலை: காஷ்மீரிலிருந்து 131 தொழிலாளர்களை மேற்கு வங்காள அரசு திரும்ப அழைத்து கொண்டது


மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி
x
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி
தினத்தந்தி 2 Nov 2019 5:15 AM GMT (Updated: 2 Nov 2019 5:15 AM GMT)

6 பேர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் உள்ள 131 மேற்கு வங்காள தொழிலாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்து கொண்டார்.

கொல்கத்தா

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில்  மேற்கு வங்காள தொழிலாளர்கள் 6  பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.  அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில், வெளிமாநிலத்தைச்சேர்ந்த டிரக் ஓட்டுநரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

தொடர்ந்து வெளிமாநிலத்தவரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, அங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதை தொடர்ந்து அங்கு வேலைசெய்யும் 131 மேற்கு வங்காள தொழிலாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்து கொண்டார்.

காஷ்மீரில் உள்ள மொத்தம் 131 தொழிலாளர்கள் மீண்டும் மாநில அரசின் உதவியுடன் மேற்கு வங்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். அவர்கள் முர்ஷிதாபாத், தினாஜ்பூர் மற்றும் மால்டாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர்  மம்தா பானர்ஜி உறுதியளித்தார்.

Next Story