புனே ரெயில் நிலையத்தில் கையெறி குண்டை போன்ற பொருள் கண்டுபிடிப்பு


புனே ரெயில் நிலையத்தில் கையெறி குண்டை போன்ற பொருள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 5:27 AM GMT (Updated: 2019-11-02T13:23:06+05:30)

புனே ரெயில் நிலையத்தில் கையெறி குண்டை போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புனே

புனே ரெயில் நிலையம் அருகே நேற்று வழக்கம் போல் ஒரு துப்புறவு பணியாளர் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு கை எறி குண்டை போன்ற பொருள் இருப்பதை கண்டுபிடித்தார். உடனடியாக அவர் ரெயில்வே போலீசார் மற்றும்  உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து வந்த போலீசார் வெடிகுண்டை அகற்றி அதனை செயல் இழக்கச் செய்தனர். மேலும் அதன் பாகங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

முன்னதாக வெள்ளிக்கிழமை, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய டெர்மினல் -3 இல் பாதுகாப்புப் படையினரால் மர்ம  பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story