டெல்லியில் காற்று மாசு: பொதுமக்கள் அவதி


டெல்லியில் காற்று மாசு: பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 3 Nov 2019 12:00 AM IST (Updated: 2 Nov 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வருகிற 5-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு காணப்படும் மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஏராளமானோர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் தலைவலியால் அவதியடைந்துள்ளனர். மணிக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் காற்று மாசு சற்று குறைந்து வருவதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் காற்று தரக்குறியீடு 407ஆக குறைந்து பதிவானது. முந்தைய தினம் இதே நேரத்தில் 484ஆக பதிவாகியிருந்தது. மஹா புயல் காரணமாக நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் பரவலாக மழைபெய்ய வாய்ப்பிருப்பதால் காற்று மாசு குறையும் எனவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story