பீகாரில் சாத் பூஜையின் போது கோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி


பீகாரில் சாத் பூஜையின் போது கோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி
x
தினத்தந்தி 3 Nov 2019 6:39 AM GMT (Updated: 3 Nov 2019 6:39 AM GMT)

பீகாரில் சாத் பூஜையின் போது கோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா,

வடமாநிலங்களில் சாத் பூஜை விழா நடைபெற்று வருகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கொண்டாடப்படும் இந்த பூஜைக்காக, நீர்நிலைகளில் திரளும் மக்கள், சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில், பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள கோவில் ஒன்றில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை கூடியிருந்தனர். ஆற்றின் கரையோரம் இருந்த கோவில் அருகே பக்தர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக அங்கு வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகாரில் சாத் பூஜையின்  கடைசி நாளில் இந்த விபத்து நடந்துள்ளது பக்தர்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story