செப்டம்பரில் 121 இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்


செப்டம்பரில் 121 இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2019 3:16 PM IST (Updated: 3 Nov 2019 4:56 PM IST)
t-max-icont-min-icon

கடந்த செப்டம்பரில் இந்தியாவை சேர்ந்த 121 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது இந்திய பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 24க்கும் மேற்பட்டவர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இஸ்ரேலை சேர்ந்த ஒரு தனியார் மென்பொருள் நிறுவனம் தயாரித்த பெகாசுஸ் (Pegasus ) என்ற மென்பொருள் இதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக அந்த 24 பேருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் வெளியானவுடன், வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதாக மத்திய மந்திரி  ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கடந்த செப்டம்பரில் இந்தியாவை சேர்ந்த 121 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது . அவர்கள் அனைவருக்கும் இது குறித்து வாட்ஸ் அப் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து  மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வாட்ஸ் அப் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story