தேசிய செய்திகள்

”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது + "||" + If They Fail, We Can Stake Claim Shiv Sena To Meet Maharashtra Governor

”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது

”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது
ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என கூறும் சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது.
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனா முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2½ ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை. தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்  தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

தற்போது சிவசேனா கட்சி தங்களுக்கு 170  எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் விரைவில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறி  வருகிரது.

இந்த நிலையில் இன்று மாலை சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் எம்பி  கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது அவர் பெரிய கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார். அக்டோபர் 24 ம் தேதிக்கு பிறகு  மராட்டியத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உடனான சிவசேனாவின் மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

இது குறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

எங்களுக்கு இடையில் கதவு என்று எதுவும் இல்லை. ஒரு முட்டுக்கட்டை உள்ளது, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாஜக மிகப்பெரிய கட்சியாக இருப்பதால் முதலில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூற வேண்டும். ஆனால் அது  தோல்வியுற்றால், நாங்கள் உரிமை கோரலாம் என கூறினார்.

இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், கட்சித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி விபி துரைசாமி
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி உள்ளார்
2. ராஜஸ்தான் அரசியல் விவகாரம் : பாஜக நாளை ஆலோசனை
ராஜஸ்தானில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாளை பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
3. காங்கிரசே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு
காங்கிரஸ் கட்சியே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி ஆகிவிடாது என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.
4. 19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல்:ஆந்திராவில் 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர். காங். கைப்பற்றியது
8 மாநிலங்களில் 19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆந்திராவில் 4 இடங்களையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது.
5. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்
புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.