டெல்லி கோர்ட்டில் போலீஸ்காரர் மீது வக்கீல்கள் தாக்குதல்
டெல்லி கோர்ட்டில் போலீஸ்காரர் மீது வக்கீல்கள் தாக்குதல் நடத்தினர்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் கடந்த சனிக்கிழமை, போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள சாகேத் கோர்ட்டில் ஒரு போலீஸ்காரரை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். அந்த போலீஸ்காரர், மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அவரை வக்கீல்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். ஒரு வக்கீல், கன்னத்தில் அறைந்தார்.
போலீஸ்காரர் அங்கிருந்து சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிளை ஹெல்மெட்டால் அடித்தனர். இந்த தாக்குதலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி, வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் கர்கர்டூமா கோர்ட்டிலும் போலீசார்-வக்கீல்கள் இடையே மோதல் நடந்தது.
இதற்கிடையே, திஸ் ஹசாரி கோர்ட்டு மோதலில் காயமடைந்த வக்கீல்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Tags :
Next Story