டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு


டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 4 Nov 2019 11:15 PM GMT (Updated: 4 Nov 2019 9:57 PM GMT)

டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கப்பிரிவு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. இந்த நிலையில் தீஸ் ஹசாரி கோர்ட்டில் வக்கீல்கள் மீது நடைபெற்ற போலீஸ் தாக்குதலை கண்டித்து, டெல்லி ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு நாளைக்கு (6-ந் தேதி) ஒத்திவைத்து உள்ளது.


Next Story