அசாமில் 'மாசில்லா இந்தியா' இலக்கிற்காக மின்சார பேருந்துகள் அறிமுகம்


அசாமில் மாசில்லா இந்தியா இலக்கிற்காக மின்சார பேருந்துகள் அறிமுகம்
x
தினத்தந்தி 5 Nov 2019 2:58 AM GMT (Updated: 5 Nov 2019 2:58 AM GMT)

அசாமில் 'மாசில்லா இந்தியா' இலக்கிற்காக மின்சார பேருந்துகளை முதல் மந்திரி சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

கவுகாத்தி,

டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது

டெல்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது.  இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.  இதனால் மாசடைந்த காற்றானது வட இந்தியாவில் இருந்து கிழக்கு கடலோரம் வழியே வந்து தமிழகம் வரை தாக்கத்தினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாசில்லா சூழலை ஏற்படுத்துவதற்காக அசாமில் மின்சார பேருந்துகளை பயன்படுத்துவது என அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் கவுகாத்தி நகரில் நேற்றிரவு 15 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடைய நோக்கம் மாசில்லா அசாம் மற்றும் இந்தியாவை உருவாக்குவது ஆகும்.  அதனால் நாங்கள் கவுகாத்தி நகரில் 15 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.  அசாம் முழுவதும் மின்சார பேருந்துகளை பரவலாக கொண்டு வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story