தேசிய செய்திகள்

சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி. + "||" + Sanjay Raut; CM will be from his party

சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.

சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.
சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
புனே,

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னருடனான சிவசேனா தலைவர்களின் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

இந்த நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்.  மராட்டியத்தின் தோற்றம் மற்றும் அரசியல் உருமாறி வருகிறது.  அதனை நீங்கள் காண்பீர்கள்.

நீதிக்கான எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.  மராட்டியத்தின் அடுத்த முதல் மந்திரியாக சரத் பவார் ஆகமாட்டார் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை மசோதா : காலையில் விமர்சனம், மாலையில் ஆதரவு- சிவசேனா அந்தர் பல்டி!!
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக சிவசேனா சாம்னாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தது.
2. ‘உத்தவ் தாக்கரே அரசுக்கு மோடி ஒத்துழைக்க வேண்டும்’ சிவசேனா சொல்கிறது
மராட்டியம் டெல்லிக்கு அடிமை அல்ல என்று கூறி இருக்கும் சிவசேனா, உத்தவ் தாக்கரே அரசுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.
3. புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார்: சிவசேனா புகழாரம்
மராட்டிய வளர்ச்சி முன்னணி உருவாக்கிய புதிய கூட்டணி அரசின் வழிகாட்டி சரத்பவார் என சிவசேனா புகழாரம் சூட்டி உள்ளது.
4. 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு மலர்கிறது
மராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது.
5. இந்துத்வா கொள்கை சோனியாவிடம் தலைவணங்குகிறது; தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு
சிவசேனாவின் முதல்-மந்திரி பதவி ஆசைக்காக இந்துத்வா கொள்கை சோனியா காந்தியிடம் தலைவணங்குகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக தாக்கினார்.