தலைநகர் டெல்லியில் போலீசாரின் திடீர் போராட்டம்-பதற்றம்


தலைநகர் டெல்லியில் போலீசாரின் திடீர் போராட்டம்-பதற்றம்
x

தலைநகர் டெல்லியில் போலீசாரின் திடீர் போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2 ந்தேதி  டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டெல்லி போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் போது டெல்லி போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி  போலீசார் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற முழக்கத்துடன்  போலீசார் ஐ.டி.ஓவில் உள்ள போலீஸ் தலைமையகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீருடையில் இருந்த போலீசார் அவர்களது குடும்பத்தினருடன் கருப்பு பேண்ட் அணிந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையில், ஐபிஎஸ் அசோசியேஷன் வெளியிட்டு உள்ள ட்விட்டில், 

போலீஸ் மற்றும் வக்கீல்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பொதுவெளியில் நடந்த உண்மைகளின் அடிப்படையில் அனைவரும் அதைப் பற்றி தகுந்த முடிவை  எடுக்க வேண்டும்.

நாடு தழுவிய அளவில், உடல் ரீதியான தாக்குதல் மற்றும் அவமானங்களுக்கு ஆளான காவல்துறையினர்  ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். சட்டத்தை மீறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கண்டிக்கவும் என கூறப்பட்டு உள்ளது.

டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் கூறியதாவது:-

இது சோதனையான நேரம் (காவல்துறைக்கு), எதிர்பார்ப்புகள் உள்ளன (காவல்துறையிடமிருந்து) மற்றும் பொறுமையாக இருக்க வேண்டும்தனிப்பட்ட சம்பவங்களை பெரிதுபடுத்த வேண்டாம்.

நீதித்துறை விசாரணையில் நம்பிக்கை உள்லது உங்கள் போரட்டத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். காவல்துறையினர் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக “சட்ட நடவடிக்கை” எடுக்கப்டும் என அவர் உறுதியளித்தார்.

Next Story