தெலுங்கானாவில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் தாசில்தாரின் கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தெலுங்கானாவில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் தாசில்தாரின் கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் மண்டல பெண் தாசில்தார் விஜயா ரெட்டி. நேற்று இவர் அலுவலகத்தில் இருந்தபோது, குர்ரா சுரேஷ் என்பவர் அங்கு வந்து விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில், விஜயா ரெட்டி பலியானார்.
அவரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவர் குருநாதம், உதவியாளர் சந்திரய்யா ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இருவரும் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, குருநாதம் இன்று உயிரிழந்தார். இவருக்கு 8 மாத கர்ப்பிணி மனைவியும், 2 வயது மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரய்யா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story