சத்தீஸ்கா் மாநிலத்தில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை


சத்தீஸ்கா் மாநிலத்தில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 6 Nov 2019 12:23 AM IST (Updated: 6 Nov 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்கா் மாநிலத்தில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தந்தேவாடா.

சத்தீஸ்கா் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள முங்கா கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதற்கு தக்க பதிலடி தரும் வகையில், பாதுகாப்புப் படையினரும் நக்சலைட்டுகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினா்.

அதன் பின்னா் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையின்போது, அந்தப் பகுதியில் இருந்து இரண்டு நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவா்களின் இருவரின் அடையாளம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவா்கள் மறைந்திருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து அந்த பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

Next Story