செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Nov 2019 9:19 PM GMT (Updated: 5 Nov 2019 9:19 PM GMT)

செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதற்கு எதிராக கீதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் மீண்டும் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால், மனுவை விசாரிக்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், சென்னை ஐகோர்ட்டு அந்த வழக்கை விசாரித்து வருவதாக செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சென்னை ஐகோர்ட்டில் கீதா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், செந்தில் பாலாஜியின் தற்போதைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.


Next Story