தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் மீது கடும் தாக்குதல் + "||" + Prayagraj: A teacher was thrashed by a group of male students

உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் மீது கடும் தாக்குதல்

உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் மீது கடும் தாக்குதல்
உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பல்கரான்பூர் பகுதியில் ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது.

இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்துள்ளனர் என கூறப்படுகிறது.  இதனால் ஆசிரியர் அவர்களை திட்டியுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், பாதுகாவலர்களை அழைத்து கொண்டு சென்று ஆசிரியர் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் கட்டைகளை கொண்டு அடித்ததில் ஆசிரியர் தரையில் விழுந்து உள்ளார்.  இதன்பின்பும் அந்த கும்பல் தாக்குதலை தொடர்ந்துள்ளது.  இதுபற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.  இந்த தாக்குதல் பற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.  குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்று செய்தியாளர்களிடம் பிரயாக்ராஜ் எஸ்.பி.யான என்.கே. சிங் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறையில் போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல் 2 பேர் கைது
மயிலாடுதுறையில் போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. கன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை தாக்கிய போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு
கன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை போலீசார் தாக்கினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர் இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க கோரிக்கை
இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்கக்கோரி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
4. பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலி
பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலியானான்.
5. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது
சகோதரர் அடித்த பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது.