திப்பு ஜெயந்தி விழா கொண்டாட விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு


திப்பு ஜெயந்தி விழா கொண்டாட விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 6 Nov 2019 3:00 PM GMT (Updated: 6 Nov 2019 3:00 PM GMT)

திப்பு ஜெயந்தி விழா கொண்டாட விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்த முடிவை கர்நாடக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. ஆனால், சமீபத்தில் பதவியேற்ற எடியூரப்பா அரசு, திப்பு ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படாது என்று அறிவித்தது. 

இதை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று இடைக்கால தீர்ப்பளித்த கர்நாடக ஐகோர்ட்,  கடந்த ஜூலை 30 ஆம் தேதி, திப்பு ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படாது என்று எடுக்கப்பட்ட முடிவை  மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  

இவ்விவகாரம் தொடர்பாக மாநில அரசு, தகுந்த முடிவை இரண்டு மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்” என்று தெரிவித்தது.  மேலும், தனியாக திப்பு ஜெயந்தி விழா கொண்டாட உரிய பாதுகாப்பு அளிக்கவும் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story