மராட்டிய கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்தது ; ஆட்சி அமைக்க உரிமை கோராது


மராட்டிய கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்தது ; ஆட்சி அமைக்க உரிமை கோராது
x
தினத்தந்தி 7 Nov 2019 6:00 AM GMT (Updated: 2019-11-07T11:30:43+05:30)

மராட்டிய மநிலத்தில் கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்து உள்ளது. மேலும் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோராது என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை

மராட்டியத்தில்  அரசு அமைப்பது தொடர்பாக அதிகார மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில் பாரதீய ஜனதாவின் தூதுக்குழு இன்று காலை 11.30 மணிக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை  சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்காடிவார், ஆஷிஷ் ஷெலார் ஆகிய  பாஜக தலைவர்கள்  தூதுக்குழுவில் இடம் பெற்று உள்ளனர். தூதுக்குழு காலை 11.30 மணிக்கு கவர்னரை சந்திப்பதற்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தூதுக்குழுவில் இடம்பெறவில்லை. ஆதாரங்களின்படி, பெரும்பான்மை இல்லாமல் மராட்டியத்தில்  ஒரு அரசை  அமைப்பதற்கான உரிமையை பாஜக கோராது என்று கூறப்படுகிறது.

Next Story