தேசிய செய்திகள்

வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம் + "||" + Windows, Doors Worth Rs. 73 Lakh: Jagan Reddy's Home Plan Draws Flak

வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம்

வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம்
வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்து உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம் எழுந்து உள்ளது.
ஐதராபாத்

மே மாதம் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. அதன் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி மே 30 அன்று ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார்.

கடந்த சில மாதங்களாக, ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். கலாம் திட்டத்திற்கு தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரிட்டது, தனது கட்சி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் வண்ணங்களில் கிராம செயலக கட்டிடத்தை கட்டியது போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு  வருகிறார்.

ஆந்திர மாநில முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி வீடு குண்டூர் மாவட்டத்தில்  ததேபள்ளி கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டிற்கு ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்யப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு முதலமைச்சரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு  எவ்வளவு பணம் செலவிட்டார் என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில்,

ஒய்.எஸ்.ஆர் ஜெகனின் அரசு அவரது வீட்டிற்கான ஜன்னல்களை சரிசெய்ய ரூ.73 லட்சம் ஒதுக்கியுள்ளது.

தவறான நிர்வாகத்தின் கடந்த 5 மாதங்களில் இந்த செலவு உண்மையிலேயே பயமுறுத்துகிறது என கூறி இருந்தார்.

சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், முதலமைச்சர் ரூ .1 மட்டுமே  சம்பளமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக பாசாங்கு செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

மே மாதம் நடந்த ஆந்திர மாநிலத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடனேயே, குண்டூரின் ததேபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் ரோடு மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து 5 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டது. வீட்டில் மின் பணிகளுக்காக பில் ரூ.3.6 கோடி செலவிடப்பட்டது.

அதுபோல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க  கூடுதல் நிலம் வாங்க 3.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தொடர்ந்து சில நாட்களில் ஒரு ஹெலிபேட்  கட்டுமானம் மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரூ.1.89 கோடி செலவிடப்பட்டது.

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது, அவர் பிப்ரவரியில் ஆந்திராவிற்கு  சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு  எதிராக டெல்லியில் நடந்த ஒருநாள்  போராட்டத்திற்கு 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டம்
ஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக கூறினார்.
2. ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்
ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
3. ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை -ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
4. ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி
ஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலியானது.
5. ஆந்திராவில் மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அறிமுகம்
ஆந்திராவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருவதையடுத்து மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.