தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு + "||" + delhi j k lg girish murmu calls on pm modi

பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு,  அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அக்டோபர் 31 ஆம் தேதி முதல் செயல்பட துவங்கியது. 

இதையடுத்து, இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை மத்திய அரசு நியமித்தது. சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு  கிரீஷ் சந்திர முர்மு  துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே. மாதுர் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கடந்த 31 ஆம் தேதி துணை நிலை ஆளுநர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

இந்த நிலையில்,  பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர்  இன்று சந்தித்து பேசினார். முன்னதாக நேற்று, லடாக் துணை நிலை ஆளுநர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியது நினைவிருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் லடாக் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாதுர் சந்தித்து பேசினார்.
2. ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.
3. காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் சாவு; 20 பேர் காயம்
காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்தனர். அதற்கு காரணமான பயங்கரவாதிகளை போலீஸ் தேடி வருகிறது.
4. 6 பேர் கொலை: காஷ்மீரிலிருந்து 131 தொழிலாளர்களை மேற்கு வங்காள அரசு திரும்ப அழைத்து கொண்டது
6 பேர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் உள்ள 131 மேற்கு வங்காள தொழிலாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்து கொண்டார்.
5. காஷ்மீருக்குள் தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம்-ஐரோப்பிய குழு எம்.பி
காஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய குழுவைச் சேர்ந்த எம்பி ஒருவர் கூறினார்.