தேர்வு நடத்தியதில் உலக சாதனை: ரெயில்வேயில் 1¼ லட்சம் பணியிடங்களுக்கு தேர்வு; 2.4 கோடி பேர் விண்ணப்பித்தனர்


தேர்வு நடத்தியதில் உலக சாதனை: ரெயில்வேயில் 1¼ லட்சம் பணியிடங்களுக்கு தேர்வு; 2.4 கோடி பேர் விண்ணப்பித்தனர்
x
தினத்தந்தி 7 Nov 2019 11:20 PM GMT (Updated: 2019-11-08T04:50:22+05:30)

ரெயில்வே காலியாக உள்ள லெவல்-1 என்ற டி பிரிவு ஊழியர்கள், என்ஜின் உதவி ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் என மொத்தம் 1.27 லட்சம் பணியிடங்களுக்கு தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் சுமார் 2.4 கோடி பேர் விண்ணப்பித்தனர்.

புதுடெல்லி, 

கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி 23-ந் தேதி வரை கம்ப்யூட்டர் மூலமான தேர்வும், மே 10-ந் தேதி திறன் தேர்வும் நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 17,500 உதவி ஓட்டுநர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கான தேர்வு வழக்குகள் காரணமாக தாமதமாகி உள்ளது.

அதேபோல லெவல்-1 ஊழியர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ல் தொடங்கி டிசம்பர் 17-ல் நிறைவடைந்தது. இதில் 53 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த ஆண்டு மே 22-ல் தொடங்கி செப்டம்பர் 1-ந் தேதி வரை தேர்வு நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும், மருத்துவ சோதனையும் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இவ்வளவு அதிக ஊழியர்களுக்கான தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தது உலக சாதனையாக கருதப்படுகிறது.


Next Story