தேசிய செய்திகள்

பொருளாதார நிலை மோசமாக உள்ளது - பிரியங்கா விமர்சனம் + "||" + The economic situation is bad - Review of Priyanka

பொருளாதார நிலை மோசமாக உள்ளது - பிரியங்கா விமர்சனம்

பொருளாதார நிலை மோசமாக உள்ளது - பிரியங்கா விமர்சனம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. சேவைத்துறை வீழ்ந்து விட்டது. வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ஆட்சியாளர்கள், தங்களை கவனிப்பதில் சுறுசுறுப்பாகவே உள்ளனர். ஆனால், பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி, அமெரிக்காவில் ‘ஹவ்டி மோடி‘ என்ற நிகழ்ச்சிக்கு சென்றார். அதே சமயத்தில், அங்கு இந்தியர்கள் பணியாற்ற தேவையான எச்-1பி விசாக்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து விட்டது. எனவே, உங்கள் ஆட்சியில் பலன் அடைந்தவர்கள் யார் என்று பா.ஜனதா அரசை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.