உத்தரபிரதேசத்தில் 8 தற்காலிக சிறைகள் அமைப்பு; அயோத்தி வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு நடவடிக்கை
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை முன்னிட்டு மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்காக உத்தரபிரதேச அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
லக்னோ,
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ஏராளமானோர் இந்த தீர்ப்பை தொடர்ந்து திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அவ்வாறு சர்ச்சைக்குரிய பகுதியை நோக்கி செல்வோரை கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவோரை அடைப்பதற்காக 8 தற்காலிக சிறைகளை உத்தரபிரதேச போலீசார் உருவாக்கி உள்ளனர். அதன்படி அயோத்தியின் அண்டை மாவட்டமான அம்பேத்கர்நகர் மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளை தற்காலிக சிறைகளாக மாற்றியமைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story