ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை -ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு


ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை -ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 6:00 AM GMT (Updated: 8 Nov 2019 6:00 AM GMT)

ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கலால் துறை அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

ஆந்திர அரசாங்கத்தின் வருவாய் குறித்து அதிகாரிகளுடன் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போது, இது குறித்த அறிவிப்பை ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார்.

மேலும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தின் அனைத்து மதுபானக்கடைகளும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் இதனை உரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதற்காகவும், நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்காகவும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Next Story