மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டிய முதல்-மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.
மும்பை,
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.
145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.
அதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், மராட்டிய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தொடர்ந்து ஆளுநரை சந்தித்த பின் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
5 ஆண்டுகள் மராட்டிய மக்களுக்கு சேவை செய்ததில் மகிழ்ச்சி. ராஜினாமாவை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story