லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் கூடாது - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் கூடாது - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Nov 2019 8:44 PM GMT (Updated: 8 Nov 2019 8:44 PM GMT)

வழக்கு விசாரணை முடிவடையும் வரை லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் கூடாது என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு ஆணையை தொடர்ந்து தமிழக அரசு நிறைவேற்றிய லோக் ஆயுக்தா சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரி ராஜேந்திரன் என்பவர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் கே.வி.விஜயகுமார் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அத்துடன் இந்த வழக்கு முடிவடையும் வரை தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் எதையும் செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

Next Story