தேசிய செய்திகள்

நாடாளுமன்றம், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வசூலித்தது ரூ.856 கோடி; செலவழித்தது ரூ.820 கோடி + "||" + Congress collects Rs 856 crore in 5 Assembly polls 820 crores spent

நாடாளுமன்றம், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வசூலித்தது ரூ.856 கோடி; செலவழித்தது ரூ.820 கோடி

நாடாளுமன்றம், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வசூலித்தது ரூ.856 கோடி; செலவழித்தது ரூ.820 கோடி
நாடாளுமன்றம் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வசூலித்தது ரூ.856 கோடி என்றும் செலவழித்தது ரூ.820 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி நாடாளுமன்றத்துக்கும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் செய்யப்பட்ட செலவு கணக்கு விவரங்களை காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


இந்த தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.856.2 கோடி நிதி திரட்டியது. இதில் பிரசாரத்துக்காக ரூ.820.9 கோடி செலவழித்தது. கட்சியின் பொது பிரசாரத்துக்கு ரூ.626.36 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.194 கோடியும் செலவழிக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கு பின்னர் கட்சியின் நிதியாக ரூ.315.88 கோடி உள்ளது. இதில் ரூ.265 கோடி வங்கி கணக்கிலும், ரூ.50 கோடி கையிருப்பு பணமாகவும் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ரூ.316 கோடி செலவழித்தது குறிப்பிடத்தக்கது. ஆளும் பா.ஜனதா கட்சி இன்னும் தனது செலவு கணக்கை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம்
மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒருவர் அதிகபட்சம் 2 துப்பாக்கிதான் வைத்திருக்க முடியும்.
2. நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு; சோனியா தலைமையில் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
3. நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல்
நாடாளுமன்றத்தில் கம்பெனி வரி குறைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
4. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
5. நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது - அறக்கட்டளையில் இருந்து காங். தலைவர் நீக்கம்
நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது. அதன் அறக்கட்டளையில் இருந்து காங்கிரஸ் தலைவர் நீக்கப்பட்டார்.