சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்


சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Nov 2019 8:38 AM GMT (Updated: 9 Nov 2019 8:38 AM GMT)

சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களுக்கும் அமித் ஷா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சார்பில் இறுதி தீர்ப்பு ஆனது வாசிக்கப்பட்டது.  இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பினை வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

இந்த தீர்ப்பு விவரத்தில், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு.  கடந்த 1857ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லிம் அமைப்புகள் தவறி விட்டன.  அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அறிவித்துள்ளது.  ராமர் கோவில் கட்டலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் அனைத்து முதல் மந்திரிகளிடமும், மாநிலங்களின் பாதுகாப்பினை ஆய்வு செய்யுங்கள்.  சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கேட்டு கொண்டு உள்ளார்.

Next Story