உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 9 Nov 2019 9:44 AM GMT (Updated: 9 Nov 2019 9:44 AM GMT)

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது;- அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை  அனைவரும் மதிப்பதோடு, பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும். அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை, அன்பை பேணி காக்க வேண்டிய தருணம் இதுவாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Next Story