டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை


டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 10 Nov 2019 1:04 AM IST (Updated: 10 Nov 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

அயோத்தி தீர்ப்பையொட்டி உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பள்ளி-கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை (11-ந்தேதி) வரை அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுத்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. மேலும் முக்கிய பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பித்தது.

அதேபோன்று தலைநகர் டெல்லி, கர்நாடகாவிலும் நேற்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Next Story