தேசிய செய்திகள்

தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Theni Love Couple Murder Case: Interim prohibition on the death penalty of the guilty - Supreme Court order

தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேனி காதல் ஜோடி கொலை வழக்கில், குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும், தேனி மாவட்டத்தின் காட்டூரை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள். பின்னர் காதல் ஜோடி சுருளி அருவி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இதில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டு இருந்தார்.


இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருநாக்கன்முத்தன்பட்டியை சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு திவாகருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து திவாகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டும், தேனி முதன்மை அமர்வு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திவாகர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, திவாகரின் மரண தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மேல்முறையீட்டு மனு மீது பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: பிரபல ரவுடி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2. நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளியின் தந்தை மனு கோர்ட்டில் தள்ளுபடி
நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளியின் தந்தை கொடுத்த மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
3. பத்திரிகையாளர் கொலை வழக்கு; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
பத்திரிகையாளர் கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
4. மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி - மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நேற்று உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது.