டி.என். சேஷன் மறைவு வேதனை அளிக்கிறது; பிரதமர் மோடி இரங்கல்


டி.என். சேஷன் மறைவு வேதனை அளிக்கிறது; பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 11 Nov 2019 1:50 AM GMT (Updated: 11 Nov 2019 1:50 AM GMT)

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று மாரடைப்பினால் காலமானார்.  அவருக்கு வயது 86.

டி.என். சேஷன் கடந்த 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துள்ளார்.  நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அதில், டி.என். சேஷன் ஒரு திறமையான அரசு பணியாளர்.  அவர் இந்திய நாட்டிற்காக மிகுந்த அக்கறையுடனும் மற்றும் ஒருமைப்பாட்டுடனும் பணியாற்றியவர்.

தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிய அவரது முயற்சிகள் நமது ஜனநாயகம் வலிமை பெறவும் மற்றும் முடிவு எடுப்பதில் பலரும் பங்கேற்கும் வகையிலும் அமைந்தன.  அவரது மறைவு வேதனை அளிக்கிறது.  ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார்.

Next Story