சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்


சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்
x
தினத்தந்தி 11 Nov 2019 7:01 AM GMT (Updated: 11 Nov 2019 7:01 AM GMT)

மராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என சரத்பவார் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில்  வேகமாக மாறிவரும் அரசியல் முன்னேற்றங்களை அடுத்து இதுகுறித்து ஆலோசிக்க டெல்லியில் அவசரமாக காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது. 

சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தேசியவாத காங்கிரசின் நிபந்தனை ஏற்கப்பட்டதால் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க வியூகம்  வகுக்கப்பட்டது.  மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருவது பற்றி காங்கிரஸ் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது பற்றி தகவல் தெரியாது. மராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும். நாங்கள் (காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்) ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டோம். என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் அதை ஒன்றாக எடுக்க வேண்டும் என கூறினார்.

Next Story