தேசிய செய்திகள்

மராட்டிய அரசியல் நிலவரம்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை + "||" + Meeting between Shiv Sena Chief Uddhav Thackeray and NCP Chief Sharad Pawar underway.

மராட்டிய அரசியல் நிலவரம்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை

மராட்டிய அரசியல் நிலவரம்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மும்பை,

மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றன. ஆனால், முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் தொடர் பிடிவாதம் காரணமாக பாஜகவால்  ஆட்சியமைக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யரி சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்கரே இன்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்  ஆதரவுடன் அரசு அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவார். சிறுபான்மை சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் அரசை  காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரிக்க வாய்ப்புள்ளது என்று  தெரிகிறது.

மதியம் 2.30 மணி அளவில் சிவசேனா  மூத்த தலைவர்கள் கவர்னரை  சந்திக்க உள்ளனர். இன்று எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம்  கொடுக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னரிடம் கூடுதல் கால அவகாசம் கோரவும் சிவசேனா திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே சரத்பவாரை சந்தித்து  பேசினார். மராட்டிய  அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.