தேசிய செய்திகள்

பிரபல வீரர்களை போல் டையபர் சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம் + "||" + Michael Vaughan Impressed With Toddler's Perfect Cricket Shots

பிரபல வீரர்களை போல் டையபர் சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம்

பிரபல வீரர்களை போல் டையபர் சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம்
பெரிய கிளப் கிரிக்கெட் வீரர்களை போல் டையபர் அணிந்து 3 வயது சிறுவன் விளையாடும் கிரிக்கெட் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
டையபர் அணிந்து கொண்டு மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாவுஹன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஃபாக்ஸ் கிரிக்கெட் என்ற டுவிட்டர் பக்கத்தில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவில், ‘டையபர் அணியும் வயதில் இருக்கும்போதும், பிரபலமான கிரிக்கெட் வீரர்களை சிறந்த நுணுக்கங்களைக் சிறுவன் கொண்டுள்ளான்’ என்று குறிப்பிட்டிருந்தது.

அதில், உள்ள சிறுவன் மிகவும் நுணுக்கமாக கிரிக்கெட் ஷாட்களை கையாண்டுள்ளான். அந்த டுவிட்டர் வீடியோவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாவுஹான் ரீட்விட் செய்துள்ளார். அதனையடுத்து, அந்த வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோ பதிவுக்கு கீழே பலரும் சிறுவனின் திறமையைப் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், வீடியோவில் உள்ள சிறுவன் யார் என்பதும், வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை