ஆட்சியமைக்க 2 நாள் அவகாசம் தர கவர்னர் மறுத்து விட்டதாக ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு
ஆட்சியமைக்க 2 நாள் அவகாசம் தர கவர்னர் மறுத்து விட்டதாக ஆதித்ய தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை,
நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு, 105 இடங்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா முதல்-மந்திரி பதவி கேட்டு பிடிவாதம் பிடித்ததால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பாஜக பின் வாங்கியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், உத்தவ் தாக்கரேவின் மகனும் எம்.எல்.ஏவுமான ஆதித்ய தாக்கரே கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
கவர்னரை சந்தித்த பின் ஆதித்ய தாக்கரே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க விரும்புவதாக கவர்னரிடம் கூறினோம். ஆட்சி அமைக்க கூடுதலாக 48 மணி நேரம் அவகாசம் கேட்டோம். எங்கள் கோரிக்கையை ஆளுநர் நிராகரிக்கவில்லை. ஆனால், ஆட்சியமைக்க அவகாசம் தர மறுக்கிறார். மராட்டியத்தில் ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மராட்டிய அரசியல் நிலவரம் பற்றி அம்மாநில கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சிவசேனாவை ஆதரிப்பது பற்றி தேசியவாத காங்கிரஸ் உடன் ஆலோசனைகள் தொடரும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story