தேசிய செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி + "||" + PM Modi to leave for Brazil on Tuesday to attend BRICS summit

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி
பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.
புதுடெல்லி,

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில்,  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.  பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று பிற்பகல் பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும். 

எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமது பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும.


தொடர்புடைய செய்திகள்

1. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2. பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து 21 நாள் ஊரடங்கால் வெறிச்சோடிய இந்தியா
பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, 21 நாள் ஊரடங்கு தொடங்கியதால் ஒட்டு மொத்த இந்தியாவும் வெறிச்சோடியது. பல மாநிலங்களில் பொருட்கள் வாங்க மளிகை கடைகளில் கூட்டம் கூடியது.
3. நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு உரையாற்ற உள்ளார்.
4. வீட்டுக்குள்ளே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்; பிரதமர் மோடி டுவிட்
கொரோனா வைரசுக்கு எதிரான நமது போர் வெற்றி பெறட்டும்,வீட்டுக்குள்ளே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
5. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் “மக்கள் ஊரடங்கு” கடைபிடிப்பு
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்கியது.