பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல்


பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல்
x
தினத்தந்தி 12 Nov 2019 8:56 AM GMT (Updated: 12 Nov 2019 9:04 AM GMT)

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில்  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.  பிரிக்ஸ் நாடுகளின் 11-வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று பிற்பகல் பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் என அழைப்பு விடுத்து உள்ளார். பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது . இந்த கூட்டத்தில் மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டு  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story