காஷ்மீர் என்கவுண்ட்டர்; கொல்லப்பட்டவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி


காஷ்மீர் என்கவுண்ட்டர்; கொல்லப்பட்டவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி
x
தினத்தந்தி 12 Nov 2019 9:31 AM GMT (Updated: 12 Nov 2019 9:31 AM GMT)

காஷ்மீர் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி என அறியப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து அந்த பகுதியை நேற்று தங்களது வளையத்திற்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.  இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சூழலில், சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் பிறந்த லஷ்கர் இ தைபா இயக்கத்தினை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு உள்ளார்.  அவர் அந்த அமைப்பின் தளபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.  அந்நாட்டு குறியீட்டின்படி, தல்ஹா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

காஷ்மீரின் பந்திபோராவை சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிட்டு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடும் குழுக்களில் ஒருவராக அவர் இருந்துள்ளார்.  அவர் மீது பல்வேறு பயங்கரவாத குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.  மற்றொரு பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.

Next Story